மதம் மாறி திருமணம் செய்த ஜோடி; பெண் வீட்டார் வெறிச்செயல் - ஊரை உலுக்கிய சம்பவம்

Attempted Murder Marriage Crime Nagapattinam
By Sumathi Dec 12, 2025 01:23 PM GMT
Report

கலப்புத் திருமணம் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலப்புத் திருமணம்

கர்நாடகா, பெங்களூருவைச் சேர்ந்தவர் ராகுல்(22). ராகுலுக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜாராவ் என்பவரின் மகள் கீர்த்தனாவும் காதலித்து வந்துள்ளனர்.

மதம் மாறி திருமணம் செய்த ஜோடி; பெண் வீட்டார் வெறிச்செயல் - ஊரை உலுக்கிய சம்பவம் | Lovers Marriage Issue Velankanni Update

இருவரும் வெவ்வேறு மதம் மற்றும் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் எதிர்ப்பை மீறி இருவரும் 3 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் திருமணம் குறித்து பேசுகையில், பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் அந்த இளைஞரின் வீட்டார் சம்மதித்துள்ளனர். மேலும், குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவுடன், ராகுல் தனது காதலியை வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். தொடர்ந்து ராகுலின் பெற்றோர் மற்றும் அவரது நண்பர் பிரகாஷ் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

பின்னணி என்ன?

இதனையறிந்த கீர்த்தனா வீட்டார் ராகுல் குடும்பத்தினரை தொடர்ப்புக் கொண்டு பேசி சம்மதம் தெரிவித்து அவர்களின் முகவரியை பெற்றுள்ளனர். இதனையடுத்து கீர்த்தனாவின் குடும்பத்திலிருந்து சுமார் 15 பேர் வேளாங்கண்ணிக்கு வந்து ராகுல் மற்றும் கீர்த்தனா தங்கியிருந்த விடுதியில் உள்ளே நுழைந்து அவரது குடும்பத்தினரை கத்தி,

இரவு பகல் பாராமல் டார்ச்சர்; அதிமுக பிரமுகர் மகள் கொலை - உடற்கூராய்வில் அதிர்ச்சி!

இரவு பகல் பாராமல் டார்ச்சர்; அதிமுக பிரமுகர் மகள் கொலை - உடற்கூராய்வில் அதிர்ச்சி!

அரிவாள் உள்ளிட்ட ஆயுதத்தால் தாக்கி, இளம்பெண்ணை அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது தடுக்க முயன்ற போது ராகுல், அவரது தந்தை டேனியல், மாமா பிரகாஷ் மற்றும் அம்மா கலையரசி ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

தகவலறிந்து விரைந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்திச் செல்லப்பட்ட மணமகள் கீர்த்தணா ஆகியோரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.