ஒரு பைக்கில் 3 பேர்; மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண் - வீடியோ காட்சிகள் வைரல்!
இளைஞரும் - இளம்பெண்ணும் நடு ரோட்டில் முத்தம் கொடுத்துக்கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
அநாகரீக செயல்
பெங்களூர் ராகிகுடா பேருந்து நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் சாலையில், ஒரு மோட்டார் சைக்கிள் சென்றுகொண்டிருந்தது.அதில் 2 இளைஞர்கள், ஒரு இளம்பெண் பயணம் செய்தனர்.
பின்னால் அமர்ந்திருந்த இளைஞரும், இளம்பெண்ணும் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போதே, நடு ரோட்டில் மாறி மாறி முத்தமிட்டுக்கொண்டு அநாகரீக செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த சிலர், இதுகுறித்து அவர்களிடம் கேட்டுள்ளனர்.
காவல்துறை நடவடிக்கை
அதற்கு அந்த இளைஞர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில், பலர் இந்த செயலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி போலீஸாருக்கு கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து போலீஸார் அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின் அந்த இளைஞருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக இதேபோல் காதலியை பெட்ரோல் டேங்கில் அமர வைத்துக்கொண்டு இளைஞர் ஒருவர் கட்டிப்பிடித்தபடி முத்தமிட்டுக்கொண்டு பயணம் செய்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.