‘நாங்க லவ் பண்ணினது தப்புதான்’ ; பிரித்து விடுவார்கள் என பயந்து கடிதம் எழுதி வைத்திவிட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி

tiruppur love couple commit suicide writes letter before hanging
By Swetha Subash Jan 08, 2022 05:52 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

திருப்பூர் மாவட்டத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு காதல் ஜோடி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரண் என்ற 18 வயது இளைஞரும் புதுக்கோட்டை மாவட்டம் கள்ளக் கோட்டை பகுதியைச் சேர்ந்த வினிதா என்கிற 18 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்திருக்கிறார்கள்.

2 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்துகொண்டு இடுவாயில் பகுதியில் தனி வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்திருக்கிறார்கள்.

இந்த தகவலை சரண் தனது வீட்டில் தெரிவித்ததால் இருவரையும் வீரபாண்டியில் உள்ள வீட்டுக்கு திருப்பதி அழைத்து சென்றிருக்கிறார் சரணின் தந்தை.

இதற்கிடையில் வினிதாவின் பெற்றோர், மகளை காணவில்லை என்று புதுக்கோட்டை போலீசில் புகார் செய்து இருக்கிறார்கள்.

இதன் பின்னர் பெண்ணின் பெற்றோரிடம் பேசி திருமண ஏற்பாடு செய்து வருவதாகச் சொல்லி சரணின் பெற்றோர் புதுக்கோட்டை சென்றிருக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்த காதலர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்று பயந்து தற்கொலை முடிவு எடுத்திருக்கிறார்கள் . அதன்படி இருவரும் ஒரே சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில், ‘நாங்க லவ் பண்ணினது தப்புதான் . எங்களால் தான் இவ்வளவு பிரச்சனைகள். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறோம்.

வினிதாவின் உடலை அவங்க வீட்டுல கொடுத்திருங்க. என் உடலை என் வீட்டில் கொடுத்திருங்க’ என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்திருக்கிறார்கள்.

இந்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.