நடுரோட்டில் சராமரியாக அடித்துக் கொண்ட காதல் ஜோடி - வைரலாகும் பரபரப்பு வீடியோ
சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒடிசா, புவனேஷ்வர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவின் வெளியே காதலர்களுக்குள் சண்டை நடக்கிறது.
அந்த சண்டையில் காதலனை காதலி நன்றாக அடிக்கிறார். பிறகு, அங்கிருந்த கல்லை எடுத்து காதலன் மீது விட்டெறிகிறார். பதிலுக்கு காதலனும், காதலியை சராமரியாக அடித்து துவைக்கிறார்.
இதைப் பார்த்த உணவு டெலிவரி ஊழியர் அவர்களை விலகி வைக்கிறார்கள். அப்போது சண்டை நடுவே டெலிவரி பாய்க்கும் அடி விழுகிறது.
அங்கிருந்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், டெலிவரி பாய் கூறுகையில், காதலி கடுமையாக திட்டியதால்தான் அந்த இளைஞன் அப்பெண்ணை அடித்ததாகவும், விலகிவிடப்போன என்னையும், அந்த பெண் கடுமையாக திட்டி அடித்ததாக தெரிவித்துள்ளார்.
Food delivery boy beats up girl in Bhubaneswar! pic.twitter.com/CgxdTwSS4D
— Odisha Bytes News (@BytesOdisha) March 31, 2022