காதலியை சந்தேகப்பட்ட இன்ஸ்டாகிராம் காதலன் நடுரோட்டில் நடந்த கொடூர சம்பவம்
இன்ஸ்டாகிராம் காதலியை சந்தேகப்பட்ட காதலன் அவரை நடுரோட்டிலேயே கத்தியால் குத்தி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் அமர்தலூரு கிராமத்தில் வசிப்பவர், ரம்யா.இவர் குண்டூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி டெக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த பெண் இன்ஸ்டாக்ராமில் வட்டெச்சேருகுரு முட்லூர் கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக் வேலை செய்து வரும் இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார்.
ஆனால் அந்த இளைஞர் இன்ஸ்டாகிராமில் தன்னை ஒரு கல்லூரி மாணவர் என்று பொய் சொல்லி அந்த ரம்யாவிற்கு காதல் தூது விட்டதாக கூறப்படுகிறது.அவரின் பேச்சில் ஏமாந்த ரம்யாவும் அவரை காதலிக்க ஆரம்பித்தார்.
பின்னர் அந்த அப்பாவி பெண்ணுக்கு அந்த போலி காதலனின் சுயரூபம் தெரியவந்துள்ளது. இதை அடுத்து அந்த பெண் அவரை விட்டு விளக ஆரம்பித்துள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் ரம்யா தன்னை விட்டு வேறு யாரையோ காதலிப்பதாக சந்தேகப்பட்டுள்ளார்.
இதனால் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடு ரோட்டில் அந்த பெண்ணோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்போது அந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை நடுரோட்டிலேயே குத்தி கொலை செய்தார். பிறகு அவரும் தன்னுடைய மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
நடுரோட்டில் பெண்ணை கத்தியால் குத்தும் போது அங்கிருந்தவர்கள் ஓடி சென்று தடுக்கும் போது அவர்களை அந்த இளைஞன் மிரட்டியுள்ளான்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.