நம்பிய காதலனை நல்ல பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்ற காதலி - போலீசார் அதிர்ச்சி..!
தனது காதலன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்த நிலையில் நல்ல பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்ய திட்டம் போட்ட காதலி
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மஹி ஆர்யா (28) . இவர் அங்கித் சவுகான என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், மஹி ஆர்யாவை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரிக்கவே காதலன் என்று கூட பாராமல் கொலை செய்ய முடிவு செய்துள்ளார் மஹி.
புதிய திட்டம் தீட்டிய மஹி தனது புதிய காதலர் தீப், வீட்டு வேலலைக்காரி உஷா தேவி, அவரது கணவர் ராமா வதார் ஆகியோரையும் கூட்டு சேர்த்துள்ளார்.
கொலை செய்வது எப்படி? என்பதை கிரைம் பேட்ரோல் என்ற தொலைக்காட்சி தொடரை பார்த்து தெரிந்து கொண்டுள்ளார். மேலும் கொலை செய்த பிறகு தடயங்களை அழிப்பது எப்படி என்பதையும் யூடியூப் மூலம் பார்த்துள்ளார்.
காதலன் உயிரிழந்த பரிதாபம்
இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த காதலரை நல்ல பாம்பை விட்டு கடிக்க செய்துள்ளார். இதில் காதலர் அங்கித் சவுகான் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 2 மாதங்களுக்கு பிறகு அங்கித் சவுகான் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.