காதலியை நம்பி போன காதலன் உயிரிழப்பு - நெஞ்சை ரணமாக்கும் வீடியோ பதிவு; மலை உச்சியில் இருந்து உருண்ட கொடூரம்
கேரளாவில் காதல் ஜோடி ஒன்று மலை உச்சியில் இருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் காதலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம் மறையூர் பகுதியை சேர்ந்த நாதிர்ஷா, நிகிலா தாமஸ் ஆகிய இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர்கள், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து பிரம்மரம் பகுதியில் உள்ள மலை உச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு அமர்ந்து சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் பிளேடால் கையை அறுத்துக் கொண்டுள்ளனர்.
இதனால், ரத்தம் வெளியேறிய நிலையில், இருவரும் அங்கேயே மயங்கியுள்ளனர். இதில், மலை உச்சியில் அமர்ந்திருந்த நாதிர்ஷா அங்கிருந்து உருண்டு கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மயங்கிய நிலையில் கிடந்த நிகிலாவை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நாதிரிஷாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் தற்கொலை செய்யும் முன்பு வெளியிட்ட வீடியோவை கைப்பற்றினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://fb.watch/7RE4OkU25M/