ஊர் சுற்ற வராத காதலிக்கு நேர்ந்த கொடுமை - நடுரோட்டில் கதற கதற காதலன் வெறிச்செயல்
ஆந்திராவில் ஊர் சுற்ற வராத காதலியை ஆத்திரத்தில் நடுரோட்டிலேயே வைத்து கத்தியால் கதற கதற வெட்டி கொன்ற காதலனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டூர்மாவட்டம் நசரத்பேட்டையை சேர்ந்த ரம்யா, கல்லூரியில் பிடெக் படித்து வந்தார். இவரும் சசிகிருஷ்ணா என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
காதலித்து வந்தாலும் வெளியில் சுற்றுவதை விரும்பாமல் இருந்து வந்திருக்கிறார் ரம்யா. ஆனால் சசிகிருஷ்ணாவோ போனில் மட்டும் பேச பிடிக்கும், வெளியில் சுற்ற மாட்டாயா என அடிக்கடி கேள்வி எழுப்பி வந்துள்ளார். இந்த காதல் நாளுக்கு நாள் வளர, ரம்யா போனில் மட்டுமே பேசி வந்துள்ளார்.
இதை விரும்பாத சசிகிருஷ்ணா ஆத்திரத்திலேயே இருந்து வந்துள்ளார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து கொண்டிருந்த ரம்யாவிடம் வெளியில் போகலாம் வா என அழைத்திருக்கிறார் காதலன் சசிகிருஷ்ணா. எங்கள் வீட்டிற்கு தெரியாமல் என்னால் வர இயலாது என இதை விடாபிடியாக ரம்யா மறுத்துள்ளார்.
இதனால் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்த காதலன் சசிகிருஷ்ணா ரம்யாவை மறைத்து வைத்திருந்த கத்தியால் நடுரோட்டிலேயே கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளார்.
இதனை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் படுகாயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.