காதலுக்கு தடையாக இருந்த தாய்..காதலி கண்முன்னே நேர்ந்த பயங்கரம் -நடந்தது என்ன?
காதலுக்கு தடையாக இருந்த காதலியின் தாயை தீர்த்து கட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் சுஷ்மிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த சுஷ்மிதாவின் தாய் சாமந்திக்குப் பிடிக்காததால் காதலைக் கைவிடுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் தாயின் பேச்சைக் கேட்காத சுஷ்மிதாவோ காதலைத் தொடர்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட படுத்த படுக்கையாக இருக்கும் அப்பாவின் நிலை குறித்து எடுத்துக் கூறியுள்ளார். இதனால் சுஷ்மிதா மனம் மாறியுள்ளார்.
இதனையடுத்து சுஷ்மிதா தனது காதலன் ராஜ்குமாரை வரவழைத்து தனது நிலைமையை எடுத்துக் கூறியுள்ளார்.இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் தன்னுடைய காதலுக்கு இடையூறாக உள்ள சுஷ்மிதாவின் தாய் சாமந்தியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
கைது
இதற்காக சம்பவத்தன்று சுஷ்மிதாவின் வீட்டிற்குச் சென்று தகராற்றில் ஈட்டுப்பட்டுள்ளார். அப்போது ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், சுஷ்மிதாவின் தாய் சாமந்தியைக் கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் ராஜ்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
