உறவை முறித்த காதலி - காதலன் எடுத்த விபரீத முடிவு!

Arrest Attack Telangana Love Failure
By Thahir Aug 07, 2021 07:13 AM GMT
Report

பேச மறுத்த காதலியை கத்தியால் குத்தி விட்டு ,தானும் தற்கொலைக்கு முயன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.

உறவை முறித்த காதலி - காதலன் எடுத்த விபரீத முடிவு! | Lovefailure Telangana Attack

தெலுங்கனாவின் ஹைதராபாத்தில் உள்ள போவன்பள்ளியில் உள்ள ஜவஹர்நகரில் வசிக்கும் 25 வயதான வாலிபர் ஒருவர் குக்கிங் வேலை செய்து வந்தார் .அவர் அதே பகுதியில் பாபுஜி நகரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையாளராக வேலை பார்க்கும் 22 வயதான பெண்ணை கடந்த நான்கு வருடமாக காதலித்து வந்தார்.

பிறகு அவர்களின் காதல் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து போனது .அதன் பிறகு அந்த காதலி காதலனின் போனை கூட எடுக்காமல் இருந்தார் .ஆனால் அந்த காதலன் அந்த பெண்ணோடு உறவாடிய நாட்களை நினைத்து இரவில் அழுதபடியே இருந்துள்ளதாக கூறப்படுகிறது .அதனால் அடிக்கடி அந்த காதலியை சந்திக்க பலமுறை முயற்சித்தும் அவரை சந்திக்க அந்த பெண் மறுத்துவிட்டார்.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான காதலன் காதலியை பார்க்க அவரின் வீட்டிற்கு கடந்த புதன் கிழமை சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த காதலியை தான் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து காதலியின் வயிற்றில் குத்தினார் பிறகு அந்த கத்தியால் தன்னையும் குத்தி கொண்டார் .அப்போது சத்தம் கேட்டு அந்த பெண்ணின் தாயார் அந்த மகளை காப்பாற்ற ஓடி வந்தார் .அதன் பிறகு அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் .பிறகு போலீசார் இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.