காதலியுடன் உல்லாசமாக இருந்த காதலன்..கைவிட்ட காதலனால் தற்கொலை செய்து கொண்ட காதலி!
கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அடுத்த திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். இவருடைய மகள் நர்மதா இவர் தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
தந்தை இறந்துவிட்டதால் நர்மதா தனது தாய் ஜோதியுடன் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தார். நர்மதாவுக்கும், ஏனாதிமங்கலத்தை சேர்ந்த நித்தியானந்தன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதில் நர்மதா கர்ப்பமானார். இதையறிந்த நர்மதாவின் உறவினர்கள் நித்தியானந்தன் வீட்டிற்கு சென்று நர்மதாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் வேறு வழியின்றி நர்மதாவின் கருவை உறவினர்கள் கலைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நர்மதா கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் எனது சாவிற்கு நித்தியானந்தன் தான் காரணம் என்று எழுதியுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் நித்தியானந்தன் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan