காதல் மனைவி பிரிவால் தற்கொலை செய்வதை நேரலை செய்த கணவர்!
காதல் மனைவி பிரிந்து போனதால் கணவர் சமூக ஊடகம் நேரலை வாயிலாக தற்கொலை செய்து கொண்டார்.
குஜராத்தின் மோர்பியில் 26 வயது இளைஞன் கிஷன் கோஸ்வாமி.இவர் வவ்டி ரோடாவில் உள்ள மீரா பூங்காவில் வசிக்கிறார் .இவர் மிட்டாலி என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார் .ஆனால் அவர்களின் காதலுக்கு அந்த பெண்னின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர் .அதனால் அவர்கள் அந்த மிட்டாளியின் திருமணத்தை ஏற்காமல் ,அந்த பெண்ணை அவரின் கணவர் கோசுவாமியிடமிருந்து பிரித்து கூட்டி வந்து விட்டனர்.
அதனால் காதல் மனைவியை பிரிந்து அவரால் வாழ முடியாமல் தவித்தார் .மேலும் அவர் மனைவியை கூப்பிட்டதற்கு அவரின் உறவினர்கள் அனுப்ப மறுத்துவிட்டனர் .அதனால் மனமுடைந்த கோசுவாமி சமூக ஊடகத்தில் நேரடியாக சில கருத்துக்களை கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டார் .அவர் கூறிய வாக்கு மூலத்தில் .அவரின் மனைவிக்கு சில கோரிக்கை வைத்திருந்தார் . அப்போது அவர்,”என்னால் இனி வாழ இயலாது. மிட்டாலி, நான் இறந்தவுடன், என் உடலை ஒரு முறை பார்க்க வா .நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள போகிறேன் . சமூக ஊடகங்களில் நான் தோன்றுகிறேன், ஏனென்றால் என் மரணத்திற்குப் பிறகு இந்த விஷயத்தில் யாராவது என் பெற்றோருக்கு உதவுவார்கள். நான் மனிதனாகப் பிறக்கக் கூடாது என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். பை மித்தாலி, “என்று கூறிவிட்டு கடந்த ஜூலை 17 அன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, கோஸ்வாமியின் தாயார் காவல்துறையை அணுகி மிட்டாலி, அவரது தந்தை பங்கஜ் கோஸ்வாமி, தாய் லதா மற்றும் சகோதரி சுதா கோஸ்வாமி ஆகியோருக்கு எதிராக புகார் அளித்தார்.
பிறகு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.