'லவ் டுடே' படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வைரல்... - தெறிக்க விடும் ரசிகர்கள்...!

Viral Video Love Today
By Nandhini 1 வாரம் முன்

'லவ் டுடே' படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

இயக்குநர் பிரதீப்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் கவனம் ஈர்த்து வருகிறார். இயக்குநர் பிரதீப் ‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.‘கோமாளி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார் பிரதீப்.

கேவலமா இருக்கிறீங்க..

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி எப்படி இருக்கீங்க என்று பிரதீப்பிடம் கேட்க, அவர் வித்தியாசமான உடல் மொழியைக் காட்டி சூப்பரா இருக்கேங்க என்று கூறினார்.

இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர் பிரதீப்பை கேவலமா இருக்கீங்க என்று கிண்டலடித்து உருவ கேலி செய்தனர்.

தக்க பதிலடி கொடுத்த இயக்குநர் பிரதீப்

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பிரதீப் பேசுகையில், நான் கேவலமாக இருக்கிறேன் என்று நான் சிறு வயது முதலே கேட்டு வருகிறேன். இது எனக்கு புதுசு கிடையாது. ஆனால் இந்த மேடையில் நான் நிற்பது எனக்கு புதுசு என்று தக்க பதிலடி கொடுத்தார்.

‘லவ் டுடே’

சமீபத்தில் இயக்குநர் பிரதீப் ஹீரோவாக நடித்து வெளியான ‘லவ் டுடே’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்றைய இளைய தலைமுறை இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். சமூகவலைத்தளங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே ‘லவ் டுடே’ படத்தைப் பற்றிய பேச்சுக்கள்தான் அடிபடுகிறது.   

இந்நிலையில் ‘லவ் டுடே’ படத்தின் மாமா உனக்குதான்... புளிம்மா உனக்குத்தான் பாடலின் Making வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பிரதீப்பிற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

love-today-movie-making-video-viral