பிரிந்தவர்களை சேர்த்து வைக்க காதல் மந்திரம்; இதை செய்தால் போதும் - அலைமோதும் கூட்டம்
பிரிந்த காதலர்களை மந்திரம் மூலம் சேர்த்து வைக்கும் நிறுவனத்திற்கு நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
காதல் மந்திரம்
பிரிந்த காதலர்களை மந்திரம் மற்றும் சடங்குகள் மூலம் ஒன்று சேர்ப்பதாக சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
காதலர்களை சேர்த்து வைக்கும் இந்த சடங்கு, 'இரத்தப்புழு காதல் சடங்கு' என அழைக்கப்படுகிறது. இதற்காக பிரிந்து சென்ற காதலர்களின் புகைப்படம் மற்றும் அவர்களை பற்றிய சில தகவல்களை வழங்க வேண்டும்.
சடங்குகள்
இதன் பின்னர் இதற்கு தேவையான சடங்குகளை செய்து அதற்கு ஆதாரமாக புகைப்படங்களையும் அனுப்பி விட்டு சில காலம் காத்திருக்குமாறு கூறுகின்றனர். இந்த சடங்குகளின் பலனாக, பிரிந்து சென்ற பலரும் மீண்டும் வந்து சேர்ந்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
இதனால் நாளுக்கு நாள் இங்கு வரும் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த சடங்குகளை செய்து வரும் ஜேம்ஸ், இதற்கான அறிவை தங்களது பாரம்பரிய பண்டைய அறிவு மூலம் பெற்றிருப்பதாக கூறியுள்ளார். இவர்கள் ரூ.10,000 முதல் ரூ.1,60,000 வரை இந்த பேக்கேஜ்கள் வழங்குகின்றனர்.
சீனாவில் தடை
ரூ.1,60,000 பேக்கேஜில் 10 வருட அனுபவம் உள்ள 3 மாந்திரீகர்கள் இந்த சடங்குகளை தொடர்ந்து 7 நாட்களுக்கு செய்வார்கள். இந்த காதல் சடங்குகள் சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் ஆகிய கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்றவை.
சீனாவில் இதுபோன்ற மாந்திரீக செயல்களுக்கு தடை இருப்பதால் பலரும் சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளில் உள்ள மாந்திரீகர்களை நாடுகின்றனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பரில், சீனாவில் ஒரு பெண்ணுக்காக இது போன்ற சடங்குகளை ஏற்பாடு செய்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது போன்ற சடங்குகளை செய்ய பலரும் ஆர்வம் காட்டினாலும், இதெல்லாம் மூட நம்பிக்கை பிரிந்து சென்ற நபர்களை இது போல சடங்கு செய்து என நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.