ரொனால்டோவைப் பார்த்து லுக் விட்டு ரசித்த மெஸ்ஸி...! - செம்ம க்யூட் வீடியோ வைரல்..!
நட்சத்திரங்களின் கால்பந்து போட்டி
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோர் கடைசியாக ஒரு முறை சவுதி அரேபியாவில் நடைபெற்றது.
இந்தப் போட்டி நட்பு ரீதியில் விளையாடினர். கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐரோப்பிய லீக் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இதனால், இனி இவர்கள் இருவரும் மோதிக் கொள்ள வாய்ப்பு ஏற்படப்போவதில்லை. மெஸ்ஸி சிறந்தவாரா, ரொனால்டோ சிறந்தவாரா என்று விவாதப் பொருளாக மாறிய நிலையில், மீண்டும் இரு நட்சத்திரங்களும் தங்களுக்குள் மோதி யார் சிறந்தவர்கள் என்று நிரூபிக்க போட்டி போட்டனர்.
இந்த ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ரியாத் அணியின் ஆண்டர்சன் கோல் அடிக்க, இறுதியில் 5க்கு 4 என்ற பரபரப்பான ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணி வென்றது.
ரொனால்டோவை பார்த்து லுக் விட்ட மெஸ்ஸி
தற்போது சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இப்போட்டி நடந்துக் கொண்டிருந்தபோது, மெஸ்ஸி எதிரே ரொனால்டோ நடந்துச் சென்றார். அப்போது, ரொனால்டோவைப் பார்த்து மெஸ்ஸி சூப்பரா ஒரு லுக் விட்டு பார்த்துக் கொண்டிருந்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
Love someone who looks at you like Messi looks at Cristiano Ronaldo ?#CR7? pic.twitter.com/d4Z5Q5hZAq
— Sarah (@_m__sara) January 19, 2023