காதலுனுடன் வீட்டைவிட்டு ஓடி வந்த பள்ளி மாணவி கர்ப்பமான நிலையில் மர்ம சாவு
போளூரில் இருந்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வந்த பிளஸ் 1 மாணவி கர்ப்பமான நிலையில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி பிளஸ் 1 படித்து வருகிறார் தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடப்பதால் வீட்டிலேயே இருந்து வந்ததாக தெரிகிறது இவரும் அதே பகுதியை சேர்ந்த முரளி (20) என்ற வாலிபரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த வாரம் இருவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அதனையடுத்து இருவரும் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் தங்கி உள்ளனர் இந்த நிலையில் நேற்று மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது அதனையடுத்து மாணவியை காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கிருந்து வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் மாணவி இறந்துள்ளார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காட்பாடி போலீசார் மைனர் பெண்ணை கடத்தி வந்து பலாத்காரம் செய்ததாக முரளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவி தற்போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர் மேலும் ஏற்கனவே பலமுறை கர்ப்பத்தை கலைப்பதற்காக சிகிச்சையும் எடுத்துக் கொண்டது தெரிய வந்துள்ளது இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.