காதல் மலர்ந்த சுவாரசியம்- ராதிகா சரத்குமார் பகிர்ந்த ரொமான்டிக் போட்டோஸ்

friends journey wonderful
By Jon Feb 04, 2021 03:50 PM GMT
Report

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் சரத்குமார்- ராதிகா, இன்று அவர்களுக்கு 20வது திருமண நாள். இருவரது முந்தைய திருமணங்களும் தோல்வியில் முடிந்த நிலையில், எதிர்பாராதவிதமாக நண்பர்களாக இருந்தவர்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனர். சரத்குமார்- ராதிகா காதல் கதை புலன் விசாரணை படத்திற்காக சிறந்த வில்லன் விருது வென்ற சரத்குமார், மெல்ல மெல்ல ஹீரோவானார்.

கடந்த 1984ம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்த சரத்குமாருக்கு, வரலட்சுமி, பூஜா என இருமகள்கள் உள்ளனர். 16 ஆண்டுகள் சாயாவுடன் வாழ்ந்த சரத்குமார், பிரபல நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டார், இதனால் இருவரும் 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் 2001ம் ஆண்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டார், கார்கில், நம்ம அண்ணாச்சி, சூர்யவம்சம் போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த பின்னர், திருமணமே வேண்டாம் என்ற முடிவில் இருந்த ராதிகாவை அவரது அம்மா சமாதானம் செய்துள்ளார். சரத்குமாரை திருமணம் செய்து கொள், உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என அவர் கூற இதைப்பற்றி யோசித்தாராம் ராதிகா. தொடர்ந்து சரத்குமாரிடமும் இதைக்கூற, இருவரும் கலந்து ஆலோசித்து முடிவெடுத்தார்களாம்.

இதுபற்றி ராதிகா ஏற்கனவே அளித்துள்ள பேட்டியில், நானும் சரத்குமாரும் நீண்ட கால நண்பர்கள், ஒருகட்டத்தில் அவருக்கு அறிவுரை கூறுவதையே என் வேலையாக வைத்திருந்தேன். நானும், சரத்தும் நிறைய பேசியுள்ளோம், நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருமணநாளை முன்னிட்டு ராதிகா பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.