காதலை மறக்கமுடியல - கணவனை விட்டு காதலனோடு ஓடி போன பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

girl suicide love problem
By Anupriyamkumaresan Jul 12, 2021 01:56 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

கர்நாடகாவில், கணவரை உதறிவிட்டு காதலனை கரம்பிடித்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் கெல்லூரா கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞரும், அதே கிராமத்தில் வசித்து வரும் பசம்மா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், பசம்மாவின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு வாலிபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

காதலை மறக்கமுடியல - கணவனை விட்டு காதலனோடு ஓடி போன பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! | Love Problem Girl Ran With Lover Suicide

இந்த நிலையில் திருமணம் முடிந்த பசம்மா, தனது கணவர் வீட்டிற்கு செல்லாமல் காதலுடன் தங்களது காதலை தொடர்ந்துள்ளார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பசம்மாவிடம் ரஞ்சித் கேட்டுள்ளார்.

அதன் படி பசம்மா கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது காதலர் ரஞ்சித்தை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் ரஞ்சித் வீட்டில் பசம்மாவை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

காதலை மறக்கமுடியல - கணவனை விட்டு காதலனோடு ஓடி போன பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! | Love Problem Girl Ran With Lover Suicide

இதனால் மனம் உடைந்த பசம்மா விரக்தியில் நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பசம்மாவின் உறவினர்கள் ரஞ்சித் வீட்டினை தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கூட்டத்தை கலைத்து, சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.