சொந்த தங்கை மீது காதல் - தடையாக இருந்த 2 வயது குழந்தையை கொன்ற தாய் மாமா
2 வயது குழந்தையை குழந்தையின் தாய் மாமா கொலை செய்துள்ளார்.
குழந்தை மாயம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீஜித் - ஸ்ரீது தம்பதி. இந்த தம்பதிக்கு தேவேந்து என்ற 2 வயது மகளும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதியன்று தூங்கிக்கொண்டிருந்த தனது 2 வயது குழந்தை தேவேந்துவை அதிகாலை 5 மணி அளவில் காணவில்லை என பாலராமபுரம் காவல் நிலையத்தில் ஸ்ரீஜித் புகார் அளித்தார்.
கிணற்றில் சடலம்
உடனடியாக ஸ்ரீஜித் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், கட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட நிலையில் இருந்ததோடு, மூன்று கயிறுகளை தூக்குப்போடும் வகையில் சுருக்கு போட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தது.
மேலும், வீட்டில் இருந்த மூடப்பட்ட கிணற்றின் ஒரு முனை விலகியிருந்த நிலையில், சந்தேகமடைந்த மீட்புப்படையினர், கிணற்றின் உள்ளே இறங்கி தேடியபோது, குழந்தை தேவேந்துவின் சடலம் மீட்கப்பட்டது.
தங்கை மீது காதல்
இது குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், குழந்தையின் தாய் ஸ்ரீதுவின் சகோதரனான ஹரிகுமார் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ஹரிகுமார் தனது சகோதரியான ஸ்ரீது மீது காதல் இருந்துள்ளது. அவருடன் தகாத உறவில் ஈடுபட முயன்றுள்ளதாகவும், அதற்கு குழந்தை தடையாக இருந்ததால் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது ஹரிகுமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குழந்தையின் தாயிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.