கண்ணை மறைத்த தெய்வீக காதல்..65 வயது முதியவருடன் 25 வயது பெண் காதல் திருமணம்

பல ஆண்கள் 30 வயதை கடந்த போதிலும் திருமணத்திற்காக காத்து கொண்டிருக்கும் நிலையில் 65 வயது முதியவர் ஒருவரை 25 வயது இளம் பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

90ஸ் கிட்ஸ் பலரும் கல்வி கடன்,குடும்ப பாரம் உள்ளிட்ட காரணங்களால் 30 வயதை கடந்த போதிலும் திருமணம் செய்யாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் தும்கூறு மாவட்டத்தில் 65 வயதான நபரை 25 வயது இளம்பெண் திருமணம் செய்ததிற்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.

துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகனா (வயது 25). இவருக்கும் ஒரு வாலிபருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற மேகனாவின் கணவர் மாயமாகி விட்டார். அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் மேகனா தனியாக வாழ்ந்து வந்தார். மேலும் தனிமையாக இருப்பதை உணர்ந்த மேகனா 2-வது திருமணம் செய்யவும் முடிவு செய்தார்.

இதனையடுத்து மேகனாவுக்கும், சிக்கதனேகுப்பே கிராமத்தில் வசிக்கும் சங்கரண்ணா (65) என்ற முதியவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.இதையடுத்து தனது காதலை சங்கரண்ணாவிடம் தெரிவித்துள்ளார்.

அவரின் காதலை ஏற்றுக்கொண்ட 65 வயது முதியவர் சங்கரண்ணா பேரன் பேத்தி எடுத்த நிலையில் திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் மலர் மாலையுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர்களின் திருமணம் முரட்டு சிங்கிள்களையும் சற்று உரசி பார்த்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் 65 ஆவது இனி ஓட்டம் பிடிக்காமல் இருகட்டும் என தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

You May Like This


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்