கண்ணை மறைத்த காமத்தால் தாயை தீர்த்து கட்டிய மகள்!
பக்கத்து வீட்டு வாலிபனோடு சேர்ந்து பெற்ற தாயை கொலை செய்த பெண்ணையும் அவரின் காதலனையும் போலிசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் சதர் கோட்வாலியைச் சேர்ந்த ஹுசைன் நகரில் வசிக்கும் 50 வயதான பச்சன் லோத், ஒரு டிராக்டர் டிரைவர் ஆவார் . அவர் தனது 45 வயது மனைவி பாப்பி, 16 வயது மகள் மற்றும் இரண்டு மைனர் மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரின் 16 வயதான டீனேஜ் மகள் பக்கத்து வீட்டில் வசிக்கும் அயூப் என்ற வாலிபரோடு அடிக்கடி ஜாலியாக இருந்துள்ளார் . இந்த உறவு கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்துள்ளது .இந்த விஷயத்தை அறிந்து கொண்ட அறிந்த தாய் பப்பி அந்த மகளை கண்டித்தார்.
மேலும் அவருக்கு வேறு ஒரு இடத்தில் கல்யாணம் செய்து வைக்க நினைத்தார் .
அதனால் அந்த பெண் இந்த விஷயத்தை பக்கத்து வீட்டு அயூப்பிடம் கூறினார் .அதனால் இருவரும் சேர்ந்து அவரின் தாய் பப்பியை கொலை செய்ய முடிவெடுத்தனர் .
அதன் படி கடந்த புதன்கிழமையன்று அந்த பப்பி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது ,அந்த மகளும் அயுப்பும் சேர்ந்து அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டனர் .
அதன் பிறகு போலீசார் இந்த கொலை பற்றி விசாரணை மேற்கொண்டு ,இறந்த பெண்னின் மகளின் செல்போனை ஆராய்ந்த போது இந்த கொலையை அந்த மகளும்
அவரின் காதலனும் சேர்ந்த செய்ததை கண்டுபிடித்தனர் .பிறகு இருவரையம் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.