மகளை காதலித்த காதலனை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்த பெற்றோர்
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு கவுசல்யா என்ற மகள் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முகமது பெமினாஸ் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார்.
இந்த காதலுக்கு விஜயகுமாரும் தீபாவும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி முகமது பெமினாசை தொடர்ந்து காதலித்து வந்திருக்கிறார் கௌசல்யா. தன் மகளிடம் எவ்வளவோ சொல்லி கண்டித்தும் கேட்காததால் முகம்மது பெமினாசிடம் சொல்லியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்று சென்றிருக்கிறார்கள் விஜயகுமாரும் தீபா. முகமது அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அவரை தீர்த்து கட்டி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் அரிவாளை மறைத்து வைத்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
அதேபோல் முகமது பெமினாசிடம் சென்று, என் மகளை மறந்து விடு. இனி நீ காதலிக்க கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள். அதற்கு முகமது பெமினாஸ் , நான் கவுசல்யாவைத் தான் காதலித்தேன். இப்பத்தான் அவளைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக கூறி என்கிறார். இதில் ஆத்திரமான விஜயகுமாரும் தீபாவும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முகமது பெமினாசை சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள்.
படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த முகமதுவை தூக்கிக் கொண்டு அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சேர்த்துள்ளனர். அங்கேயே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் முகமது. சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் மாவட்ட போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் விஜயகுமார், தீபா மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.