காதல் திருமணம் செய்து கொண்ட 6 மாதத்தில் பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை!
காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் திருமணமாகி 6 மாதத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,பெரம்பூர்,நீலம் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கீர்த்தனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கீர்த்தனா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களாக ராமச்சந்திரன் வேலைக்கு செல்லாமல் சமூக வலைத் தளத்தில் ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மன வருத்ததில் இருந்த கீர்த்தனா கடந்த வியாழக் கிழமை இரவு வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் கீர்த்தனாவை பெரியார் நகர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கீர்த்தனா நேற்று மதியம் மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த திரு.வி.க. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி மாதமே ஆகியுள்ளதால் ஆர். டி. ஒ விசாரணைக்கு செம்பியம் உதவி கமிஷனர் பரிந்துரைத்து அனுப்பி வைத்தார்.