காதல்னா சும்மா இல்ல: காதலரை துடிக்க துடிக்க கொலை செய்து சமையலறையில் புதைத்த காதலி..
பெண் தனது காதலரை துடிக்க துடிக்க கொலை செய்து சமையலறையில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரசேதம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள கிராஜ்பூர் பகுதியில் வசிப்பவர் முர்சலீன்(19). இவர் அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளதால் இவர்களின் உறவை பற்றி ஊர் மக்கள் தவறாக பேசியுள்ளனர். இருந்தாலும் இருவரும் எதை பற்றியும் கண்டுகொள்ளாமல் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் முர்சலீன் கடந்த 11ஆம் திகதி முதல் காணவில்லை.
அவரது பெற்றோர்கள் எங்கே தேடியும் முர்சலீனின் கிடைக்காததால் வேறு வழியின்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலிஸ் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரது சிம் கார்டின் சிக்னல் அந்த பெண்ணின் வீட்டை காட்டியுள்ளது.
இதனால் அந்த பெண்ணின் வீட்டில் போலிஸார் முதற்கட்ட சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சமையறையில் புதிதாக டைல்ஸ் ஒட்டியிருந்ததை கவனித்த அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தை உடனடியாக தோன்றும்படி உத்தரவிட்டனர்.
அப்போது அங்கு புதைக்கப்பட்டிருந்த வாலிபரின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அப்பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.