எங்கள கொலை பண்ணிடுவாங்க...காப்பாத்துங்க..காதல் ஜோடியை கடத்த முயற்சி? - பெற்றோர் மீது வழக்கு..!
கோவையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடியை தாக்கிய விவகாரம். தந்தை, தாய் மாமன் உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த சினேகா சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த சினேகா மற்றும் விக்னேஷ்வர் கடந்த எட்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
இதனால் சினேகா மற்றும் விக்னேஷ்வர் கடந்த ஒன்றாம் தேதி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இரு வீட்டாரையும் அழைத்து பேசிய காவல் துறையினர் சமதானம் செய்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று முந்தினம் தம்பதியை வீட்டிற்கு வரச்சொல்லிய பெண்ணின் பெற்றோர் வீட்டில் வைத்து இருவரையும் தாக்கியுள்ளனர்.
பின்னர் அவர்களை காரில் ஏற்றி அழைத்து சென்ற போது, லட்சுமி மில் சிக்னலில் கூச்சல் எழுப்பி காதல் தம்பதியினர் கதறிய நிலையில், பொது மக்கள் இருவரையும் போலீசார் உதவியுடன் மீட்டனர்.
இப்படியிருக்க சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சினேகா அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 294 பி, 323, 506 (1) ஆகிய பிரிவுகளில் சினேகாவின் தந்தை ஆறுமுகசாமி, தாய்மாமன் ரமேஷ், பெரியப்பா மகன் முனியசாமி, மற்றும் அமுல் என்பவர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This