காதல் திருமணமாகி 4 நாட்கள்தான் - மனைவி கண் முன்னே கணவன் கொடூரம்!
மனைவி கண்முன்னே கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதல் திருமணம்
உத்தர பிரதேசம், சர்வத் பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தீரஜ்(22). அதே கிராமத்தில் வசிக்கும் ரோலி கிரி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவர் வீட்டிலும் சம்மதிக்காத நிலையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பிறகு,லக்னோவிலுள்ள மடியான்வ், எல்டெகோ கிரீன் குடியிருப்பில் வாடகைக்கு வசிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், திருமணமாகி 4 நாட்களில் திடீரென்று தீரஜ் மனைவி ரோலியை அறையில் வைத்து பூட்டிவிட்டு ஹாலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கணவன் தற்கொலை
உடனே பதறிய மனைவி கதவை உடைத்து கணவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். தகவல் அறிந்து இருவரது உறவினர்களும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
மேலும், மருமகள் ரோலி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் மகனை சித்திரவதை செய்ததாகவும், அதனை தாங்க முடியாமல் தனது மகன் தற்கொலை செய்துள்ளதாகவும் தீரஜ் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தீரஜின் காதல் திருமணத்துக்கு உறுதுணையாக இருந்ததற்காக அவரது மைத்துனரும் தாக்கப்பட்டதாகவும், இதனால் தீரஜ் மனம் உடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.