கல்லூரி மாணவன் மீது காதல்! கணவனை கொன்றுவிட்டு மாணவனுடன் ஓட்டம்பிடித்த இரு குழந்தைகளின் தாய்
விழுப்புரத்தில் கல்லூரி மாணவன் மீது காதல் கொண்ட திருமணமான பெண், கணவனை அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. விழுப்புரத்தின் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியை சேர்ந்தவர் லியோபால், ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த சுசித்ரா மேரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர்.
குடும்பத்துடன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர், கொரோனா காலத்தில் கடும் கஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தினரை சொந்த ஊரில் விட்டுவிட்டு சென்னை வந்த லியோபால் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற லியோ பாலை காணவில்லை என்று அவரது மனைவி சுசித்தா மேரி, அவரது மாமனார் சகாயராஜூக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விக்கிரவாண்டி காவல்நிலையத்துக்கு வருமாறு கூறிவிட்டு, சகாயராஜ் அங்கு சென்றுள்ளார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் சுசித்ரா மேரி வராததால், வீட்டிற்கு சென்று பார்த்த போது, குழந்தைகள் மட்டும் தனியாக இருந்துள்ளனர். அவர்களிடம் விசாரித்த போது, அம்மா எங்கோ சென்று விட்டதாக கூறியுள்ளனர், இந்நிலையில் வீட்டின் பின்பக்கத்தில் குழிதோண்டிய அறிகுறிகள் இருந்துள்ளன.
இதனை தொடர்ந்து சகாயராஜ் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த அதிகாரிகள், அந்த இடத்தை தோண்டிய போது, லியோ பாலின் சடலம் இருந்துள்ளது. இதனையடுத்து அண்டை வீட்டாரிடம் விசாரணை நடத்தியதில், பக்கத்து வீட்டில் வசித்த ராக்கி என்ற கல்லூரி மாணவனிடம், சுசித்ரா மேரி நெருங்கி பழகியது தெரியவந்தது.
இந்நிலையில் லியோ பால் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வர, இருவரும் சந்திக்க முடியாமல் தவித்துள்ளனர். எனவே இரண்டாம் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த சுசித்ரா மேரி, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவனை இரும்பு ராடால் அடித்துக் கொன்று சடலத்தை புதைத்துள்ளார்.
தொடர்ந்து தன் மீது சந்தேகம் வராமல் இருக்க, புதுச்சேரிக்கு திருமணத்திற்கு சென்று விட்டதாக கூறியதுடன் சில நாட்களில் ராக்கியுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.
இதற்கிடையே இருவரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.