Wednesday, May 14, 2025

காதல் திருமணத்தால் ஏற்பட்ட மோதல்..நடவடிக்கை எடுத்த போலீசார்

police love problem caste solve
By Praveen 4 years ago
Report

பண்ருட்டி அருகே காதல் திருமணம் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம், புதுகாலனியை சேர்ந்தவர் அய்யப்பன் மகன் அய்யனார், 19. இவர் புதுச்சேரி, வில்லியனுாரை சேர்ந்த உறவினர் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து பெண்ணின் தாய், வில்லியனுார் போலீசில் அளித்த புகாரின் பேரில், திருமணம் செய்து கொண்ட இருவரையும், விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே காதல் தம்பதி, புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக நினைத்த அய்யனாரின் தந்தை அய்யப்பன், 48; மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் பெண்ணின் உறவினர்கள் அங்கு திரண்டனர்.

அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அய்யப்பன், மணப்பாக்கம் வீரபாண்டியன் (27),மதிவாணன் (37), பால்ராஜ், (28)ஆகியோரை கைது செய்தார்.