ஒருதலை காதலால் நிகழ்ந்த விபரீதம் - இளைஞனை பிடித்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

girl love issue laday andhar
By Arun Raj Jun 19, 2021 09:17 AM GMT
Report

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த இளைஞனை கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கடப்பா மாவட்டம் பட்வேலு மண்டலம் சென்னூர்ராஜு பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரண். இவர் அருகே உள்ள சிந்தலசெரு கிராமத்தை சேர்ந்த சிரிஷா என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளாார். இந்தநிலையில் சிரிஷா காதலை ஏற்க மறுத்ததால் கோபமடைந்த சரண். சிரிஷாவின் சொந்த ஊருக்குச் சென்று சிரிஷாவிடம் தான் கடைசியாக உன்னிடம் பேச வேண்டும் தனியாக வா என அழைத்துள்ளார். இதை கேட்டு தனியாக சென்ற சிரிஷாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துள்ளான். இதனால் அலறி துடித்த நிலையில் அங்கு வந்த கிராம மக்கள் சரணை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இந்நிலையில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த சிரிஷாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர் கூறிய நிலையில் அந்த இளைஞனை கிராம மக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் காயங்களுடன் இருந்த சரணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு தலை காதலால் பெண் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.