தகாத உறவு: காதலன் மீது கொதிக்கும் எண்னெயை ஊற்றிய திருமணமான பெண் - நடந்தது என்ன?
இளம்பெண், காதலன் மீது கொதிக்கும் எண்னெயை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
ஈரோடு, பவானியை சேர்ந்தவர் கார்த்தி(26). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலிப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் ஏற்கனவே திருமணமான அந்தப் பெண் முதலில் காதலை மறுத்துள்ளார். கார்த்தி விடாபிடியாக இருந்ததால் காதலுக்கு சம்மதித்து இருவரும் பழகி வந்துள்ளனர். தொடர்ந்து இந்த செய்து கார்த்தி வீட்டிற்கு தெரிந்து அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
ஆசிட் வீச்சு
மேலும், திருமணத்திற்கு பார்த்த பெண்ணிடமும் பேசி வந்துள்ளார். இதனால், இந்தப் பெண்ணிடம் இருந்து விலகியுள்ளார். அதனை கேட்ட பொழுது தான் மற்றொரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரைதான் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஆனதில் கார்த்தி செல் நம்பரை மாற்றியுள்ளார்.
அதனை கண்டுபிடித்த இளம்பெண் மீண்டும் சண்டையிட்டுள்ளார். அதில் கார்த்தி சரியாக பதிலளிக்காமல் இருந்துள்ளார். அப்போது இந்தப் பெண் கடைசியாக பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சம்மதித்து கார்த்தியும் வந்துள்ளார். அந்த நேரத்தில் இளம்பெண் தான் மறைத்து வைத்திருந்த கொதிக்கும் எண்னெயை கார்த்தி மீது வீசியுள்ளார்.
இதில் அவர் முகம், கழுத்து, மார்பு என பல்வேறு இடங்களில் தோல் உரிந்துள்ளது. வலியில் அலறிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.