காதல் படுத்தும் பாடு; காதலனை பார்க்க சென்ற மகளின் தலையை துண்டித்து கொலை செய்த பெற்றோர்
உத்தர பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரின் சடலம் தலையில்லாமல் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காதலால் நேர்ந்த விபரீதம்
உத்தர பிரதேச மாநிலம் ரிஹான் கார்டனில் வசித்து வருபவர் ஷாஹித் குரேஷி இவரது மகள் சானியா ரிஹான்.
இவரது மகளின் உடல் உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் லிசாடி கேட் அருகே உள்ள வாய்க்காலில் தலை இல்லாமல் பெண்ணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. சானியா ரிஹான் என்ற அந்த இளம் பெண் அதே பகுதியைச் சேர்ந்த வாசிம் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து அவரின் குடும்பத்தினரிடம் வாசிமை திருமணம் செய்து வைக்க கோரி கேட்டுள்ளார். இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் காதலன் வாசிமை சந்திக்க அடிக்கடி சானியா ரிஹான் டீயில் துாக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து விட்டு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் வாசிமை சந்திக்க திட்டமிட்ட அந்த இளம் பெண் தனது பெற்றோருக்கு வழக்கம் போல் டீயில் துாக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.
மகள் கொடுத்த டீ மீது சந்தேகம் அடைந்த அவரது தாய் மகள் கொடுத்த டீயை இரவு குடிக்கவில்லை.
மகளின் தலையை துண்டித்த பெற்றோர்
இந்த நிலையில் இரவு 2 மணிக்கு அனைவரும் துாங்கிவிட்டார்கள் என நினைத்து வாசிமை சந்திக்க செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அவரது தாய் விழித்துக் கொண்டு மகளை பிடித்துள்ளார். அப்போது பெற்றோருக்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகள் சானியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெற்றோர் தலை வேறு உடல் வேறாக வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர்.
இதையடுத்து பெற்றோரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.