எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும் - பிரதமர் மோடி
எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும் என மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதில் உரை நிகழ்த்தினார்.
அப்போது அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி உரை
நாடாளுமன்றத்தில் பலருடைய நடவடிக்கைகள், உரைகள் ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும் தங்களது குறைகளை உணரவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் முன்னேற்றபாதை குண்டும், குழியுமாக இருந்தது.

மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமால் பொன்னான காலத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்தன.
நாட்டின் பிரச்சனைகளுக்கு நாங்கள் நிரந்திர தீர்வுகளை கண்டு வருகிறோம். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் 12 கோடி குடும்பங்களுக்கு நேரடியாக குடிநீரை கொண்டு சேர்ந்திருக்கிறோம்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் 3 கோடி மக்களுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தன.
கர்நாடகாவில் ஜன்தன் கணக்குகளை தொடங்கி மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டு வந்திருக்கிறோம்.
ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. விரக்தியடைந்த பலர் முழக்கங்களை எழுப்புகிறார்கள் என எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
நாடாளுமன்றத்தில் சில எம்பிக்களின் செயல்பாடுகளும், அவர்கள் பயன்படுத்தப்படும் மொழியும் வேதனை தருகிறது.
பாஜக ஆட்சிக்கு வந்த பின் சமையல் எரிவாயு இணைப்புகள் 14 கோடியில் இருந்து 32 கோடியாக உயர்ந்துள்ளது.
அரசு திட்டங்களின் பலன் சாதி, மத பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கின்றன.