4 இந்தியர்கள் உள்பட 22 நபர்களுடன் மாயமான விமானம் கண்டுப்பிடிப்பு!

Nepal
By Swetha Subash May 29, 2022 12:27 PM GMT
Report

நேபாளத்தில் 4 இந்தியர்கள் உள்பட 22 நபர்களுடன் மாயமான விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் இன்று காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சமுக்கு புறப்பட்டு சென்ற விமானம் மாயமானது. மாயமான விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்தனர்.

4 இந்தியர்கள் உள்பட 22 நபர்களுடன் மாயமான விமானம் கண்டுப்பிடிப்பு! | Lost Nepal Tara Flight With 22 Passengers Found

பொக்காராவில் இருந்து புறப்பட்டு சென்ற 25 நிமிடத்தில் ஜோம்சமில் தரையிறங்கியிருக்க வேண்டிய விமானம் சுமார் 2 மணி நேரமாக தொடர்பில் இல்லாமல் மாயமானதால் விமானத்தை தேடும் பணியில் ஹெலிகாப்டர் அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும், விமானத்தை தொடர்புக்கொள்ளும் முயற்சியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேபாளத்தின் மஸ்டங் பகுதியில் உள்ள கோவாங் என்ற இடத்தில் விமானம் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.