ஊரடங்கினால் திராட்சை சாகுபடி நஷ்டம் தான் .. சோகத்தில் விவசாயிகள்
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை சுற்றுவட்டார பகுதிகளில் திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா நோய்தொற்று பரவலை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.இதனால் வெளிமாநிலத்திற்க்கு திராட்சை பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாமலும், உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய முடியாமலும் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் ஒரு ஏக்கருக்கு 2 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் திராட்சைப் பழங்கள் சாகுபடியால் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளான விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 600 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெறும் இப்பகுதியில் குளிர்சாதன கிடங்கு மற்றும் குளிர்பான தொழிற்சாலை அமைக்க அரசு முன்வர வேண்டும் என கூறினர்.