Ex'க்கு கல்யாணம்...லாஸ்லியாவின் Insta பதிவை கவனிச்சீங்களா..?

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகர் கவினுக்கு திருமண முடிந்துள்ள நிலையில், லாஸ்லியாவின் சோசியல் மீடியா பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.
கவின் திருமணம்
நடிகர் கவின் - மோனிகா டேவிட் இருவரின் திருமண நேற்று சென்னையில் நடைபெற்று முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், பலரும் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
லாஸ்லியா போஸ்ட்
இந்நிலையில், நேற்று நடிகை லாஸ்லியாவின் இன்ஸ்டா பதிவு ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவும் கவினும் ஒன்றாக பங்கேற்ற போது இவருக்கும் காதல் உருவான நிலையில், அது சிறிது காலத்திலேயே முறிந்தது.
இதனை தொடர்ந்து தான் கவினுக்கும் மோனிகா டேவிட்டிற்கும் திருமணம் முடிந்துள்ளது. அந்த திருமண புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், லாஸ்லியா பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள லாஸ்லியா, அதில், “Cant help but wonder என்ற தலைப்பும் பதிவிட்டுள்ளார். அதாவது, ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை” என அதன் பொருளாகும். அதனை வைத்து நெட்டிசன்கள் கவினின் திருமணத்தை தான் அவர் விமர்சித்துள்ளார் என கூறி வருகின்றனர்.