ஹரீஷ் கல்யாணின் திருமண வரவேற்பு விழாவில் படுகவர்ச்சி உடையில் வந்த லாஸ்லியா... - வாயடைத்த ரசிகர்கள்
நடிகர் ஹரீஷ் கல்யாணின் திருமண வரவேற்பு விழாவில் படுகவர்ச்சி உடையில் இலங்கைப் பெண் லாஸ்லியா வந்ததைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்துள்ளனர்.
ஹரிஷ் கல்யாண்
பிக்பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமானவர்தான் ஹரிஷ் கல்யாண். இவர் ‘தனுசு ராசி நேயர்களே’, ‘தாராள பிரபு’, ‘ஓமணப்பெண்ணே’, ‘கசடதபற’ என அடுத்தடுத்து தமிழில் வித்தியாசமான படங்களில் நடித்துள்ளார்.
திருமணம்
கடந்த ஜூன் மாதம் நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.
பின்னர் அவரது நிச்சயதார்த்தம் இந்த மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தசரா விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது மட்டுமல்லாமல், தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரையும் அறிமுகப்படுத்தினார்.
இதனையடுத்து, ஹரிஷ் கல்யாண், நர்மதா உதயகுமாருக்கு சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.இவரது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
கவர்ச்சி உடையில் வந்த லாஸ்லியா
இதையடுத்து இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. அதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இவ்விழாவில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் கலந்துகொண்டது தான் ரொம்ப ஹைலைட்டாக பார்க்கப்பட்டது. காதல் முறிவுக்கு பின்னர் கவினும், லாஸ்லியாவும் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இதுவே ஆகும்.
இந்த விழாவில் கவின் சிங்கிளாக வந்து மேடையேறி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்த சமயத்தில், நடிகை லாஸ்லியா கவர்ச்சி உடை அணிந்து வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
லாஸ்லியாவின் இந்த கவர்ச்சிகரமான எண்ட்ரி யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போது லாஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.