ஒவ்வொரு நிமிடமும் பல உயிர்களை இழக்கும் அபாயம் - முதல்வர் கெஜ்ரிவால்
கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் என்னவென்பதை இந்தியாவிற்கே உணர்த்தியது டெல்லி மாநிலம் தான்.
கடந்த மாதம் டெல்லியில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
ஆனாலும், அங்கு மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு கொரோனா பாதிப்பு 1,500க்கும் குறைவாகவே உள்ளது.
இந்த நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியைத் துரிதப்படுத்திய டெல்லி அரசு .
உள்நாட்டு நிறுவனங்களிடம் தடுப்பூசி கிடைக்காததாலும், மத்திய அரசின் ஒதுக்கீடு போதிய அளவு இல்லாததாலும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முன்வந்தது.
ஆனால் அந்நிறுவனங்களோ நாங்கள் மத்திய அரசிடம் தான் பேசுவோம்; உங்களுக்கு தர மாட்டோம் என திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசிடம் தற்போது ஒரு தடுப்பூசி கூட கையிருப்பில் இல்லை.
இதனால் தடுப்பூசி மையங்கள் நான்கு நாட்களுக்கு மூடப்படுகிறது. இந்த சமயத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இனி தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் பல உயிர்களை நாம் இழக்க நேரிடும் என கூறியுள்ளார்.