ஜிம்முக்கு போகாமல் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? வந்து விட்டது வாய்க்கு பூட்டுபோடும் புதிய கருவி!
நியூசிலாந்தின் OTAGA பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு, உடல் எடை குறைப்புக்கான புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கருவியை வாயில் பொருத்திக்கொண்டால் 6 மில்லி மீட்டர் அளவுக்கு மட்டுமே வாயை திறக்க முடியும்ஆனால் வழக்கமாக பேசலாம்.
இந்தக் கருவி பொருத்தப்படுவதால், திட உணவுப் பொருட்களை உட்கொள்ள முடியாமல், திரவ உணவுகளை மட்டுமே உட்கொள்ள முடியும் ஆகவே சில மாதங்களில் நீங்கள் மெலிந்த தேகத்தை பெறலாம் என OTAGA ஆய்வாளர்கள் அடித்து கூறுகின்றனர்

மேலும் இந்த வாயினை பூட்டும் கருவியினை சோதனை அடிப்படையில் பொருத்தியதில் இரு வாரங்களில் மூன்றரைக் கிலோ வரை எடை குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
Device that locks mouth shut to help people lose weight via ‘liquid diet’ is branded torture device by critics https://t.co/sbCa2OOOZ0
— The Independent (@Independent) June 28, 2021
அதே சமயம்ஏராளமான இணைய வாசிகள் இந்த கருவியினை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
யார் கண்டது ஜிம்முக்கு போகாமல் உங்கள் உடல் எடையினை குறைக்க வேண்டுமா வந்து விட்டது வாய் பூட்டும் கருவி என விளம்பரங்களும் வரலாம்,