எனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்டால் கூட கவலை இல்லை - கமல் ஹாசன் உருக்கம்
எனது 176 கோடி ரூபாய் சொத்துக்களை அரசியலில் இழந்து விட்டால் அடுத்து என்ன செய்வேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் உருக்கமாக பேசியுள்ளார். இந்நிலையில் முதன்முதலாக சட்டசபைத் தேர்தலை நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரது கட்சி எதிர்கொள்ள உள்ளது, அவர் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், நேற்று தனது இறுதிப் பிரச்சாரத்தின்போது, அவர் மக்களிடம் உருக்கமான முறையில் பேசினார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில்,என்னிடம் இருக்கும் 176 கோடி சொத்துக்களையும் அரசியலில் இழந்துவிட்டால் என்ன செய்வாய் என்கிறார்கள் ஏற்கனவே நான் வாழ்ந்த என் வீட்டை கட்சிக்கு கொடுத்துவிட்டு 1200 சதுர அடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இதுவும் போனால் இன்னும் எளிமையாக வாழ பழகிக் கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.