லாரி செட் உரிமையாளர் கொலை - வேலையை விட்டு நீக்கியதால் ஊழியர்கள் ஆத்திரம்

murder virudhunagar
By Petchi Avudaiappan Oct 04, 2021 05:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

விருதுநகரில் முன்னாள் ஊழியர்களால்  லாரி செட் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி என்பவர் ரயில்வே பீடர் சாலையில் லாரி செட் நடத்தி வருகிறார். இவரை நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டிவிட்டுத் தப்பினர்.இதில் சம்பவ இடத்திலேயே பால்பாண்டி உயிரிழந்தார்.

இதுகுறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால்  பால்பாண்டியிடம் முன்பு வேலை செய்த லோடு மேன்கள் மணிகண்டன், சூசை இமானுவேல் இருவரிடமும் போலீசார் விசாரித்ததில் இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தங்களை வேலையை விட்டு நீக்கியதால் வேலை இல்லாமல் இருந்து வந்தததாகவும், அந்த விரக்தியில் இருவரும் சேர்ந்து பால்பாண்டியை கொல்ல திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் குடித்துவிட்டு பால்பாண்டி லாரி செட்டை பூட்டிவிட்டு வரும் நேரத்தை அறிந்து காத்திருந்து அவரை அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். 

இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.