வேண்டுமென்ற லாரி டயரில் தலை வைத்து உயிரிழந்த நபர்! சிசிடிவி காட்சி பார்த்து போலீசார் அதிர்ச்சி!
கோயம்பேடு பகுதியில் ஒருவர் வேண்டுமென்ற லாரி டயரில் தலை வைத்து உயிரிழந்துள்ள சம்பவத்தை சிசிடிவி காட்சியை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கோயம்பேடு நூறடி சாலையில் லாரி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரிக்கையில், அந்த நபர் யார் என்ற விவரம்தற்போது தெரியவில்லை. சிசிடியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் அது விபத்து இல்லை என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அந்த சிசிடிவி பதிவில், இறந்தவருக்கு 40 வயது கொண்டனர். அவர் சாலை ஓரத்தில் நின்று இருபுறமும் வரும் வாகனங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். சட்டென்று தனது லுங்கியை நன்றாக கட்டிக் கொண்டு வேகமாக வந்த லாரி முன் படுத்து விடுகிறார்.

லாரி அவர் தலை, உடல் மீது ஏறி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இவை அனைத்தும் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.
அந்த நபர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.