விளையாட தொடங்கியது மழை... லார்ட்ஸ் டெஸ்ட் தொடங்குவதில் தாமதம்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இப்போட்டியில் காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஷர்துல் தாகூர் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
2வது டெஸ்ட் போட்டிக்கான அணிகளின் வீரர்கள் விவரம்:
இந்தியா: -
விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகம்மது சமி, பும்ரா, முகம்மது சிராஜ்
இங்கிலாந்து:-
ரோரி ஜோசப், டாம் சிப்ளி, ஹசீப் ஹமீது, ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, ஜோஸ் பட்லர், சாம் கரண், ஒலி ராபின்சன், ஆண்டர்சன், மார்க் வுட்