பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை; தலைமறைவான முன்னாள் டி.ஜி.பிக்கு அதிரடி லுக் அவுட் நோட்டீஸ் !
பாலியல் புகார் வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலியல் வழக்கு
கடந்த 2021-ம் ஆண்டு, விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பணியில் இருந்த பெண் எஸ்.பிக்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் மேல் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ராஜேஸ் தாசுக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ராஜேஷ் தாஸ், தனக்கு வித்திக்கப்பட்ட இந்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தரப்பில் மனு தாக்கல் செய்தார்.
அதிரடி நோட்டீஸ்
ஆனால் அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகிய நிலையில், கடந்த வரம் அவரை கைது செய்யவதற்காக சிபிசிஐடி போலீசார் ராஜேஷ் தாஸ் இல்லத்திற்கு சென்றனர்.
அப்போது, அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது. அங்கு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே அவர் சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு தப்பிச் சென்றுள்ளது தெரியவந்தது.
மேலும், அவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் செய்தி வெளியான நிலையில், அதனை தடுக்க நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு சிபிசிஐடி போலீஸார் சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.