பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகர் - லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு

Sexual harassment
By Swetha Subash Apr 29, 2022 09:56 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

மலையாளத்தில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் விளங்கும் நடிகர் விஜய் பாபு மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் விஜய் பாபு, ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் எனும் படத்திற்க்காக கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதையும் வென்றுள்ளார்.

பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகர் - லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு | Look Out Notice For Actor Vijay Babu Assault Case

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி விஜய் பாபு மீது கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இது மலையாள திரைப்படத்துறையில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை அளித்த புகாரில், கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய விஜய்பாபு தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி இது போன்று தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எர்ணாகுளம் தெற்கு போலீசார் அந்த நடிகை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய் பாபு மீது புகார் அளித்து இத்தனை நாட்களாகியும் அவரிடம் எவ்வித விசாரணையும் நடத்தவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை தனது ஃபேஸ்புக் லைவ்-இல் மறுத்துள்ள நடிகர் விஜய் பாபு, அந்த நடிகையை கடந்த 2018-ம் ஆண்டு முதல் தனக்கு தெரியும் என்றும் ஆடிஷனில் தேர்வானதால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான படங்களில் நடிக்க வாய்ப்புகள் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நடிகை மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தனக்கு ஏராளமான குறுஞ்செய்திகள் அனுப்பியிருப்பதாகவும் அதன் ஸ்க்ரீன் ஷாட்டுகள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ள நடிகர் விஜய் பாபு, நடிகை தொடர்ந்திருக்கும் வழக்கை எதிர்த்து மான பங்க வழக்கு தொடுக்க போவதாகவும் தனது லைவ் இல் குறிப்பிட்டுள்ளார்.   

இந்நிலையில், விஜய் பாபு மீதான புகாரின் அடிப்படையில் விஜய் பாபுவுக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.