என்னது திப்பிலியில் இவ்வுளவு பலன் இருக்கா?
திரிகடுகம் பல மருந்துகளுக்குத் துணைமருந்தாக பயன்படுகிறது. இந்த 3 மூலிகை பொருட்களில் முக்கிய இடம் பிடித்துள்ள திப்பிலி பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.
இது இப்போது மட்டுமல்ல பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில் முக்கிய பங்கு வகித்தது திப்பிலி அதன் மருத்துவ பயன்களை தற்போது பார்க்கலாம்.
திப்பிலியை நன்றாக பொடியாக அரைத்தோ அல்லது திப்பிலிப்பொடியையோ, கடுக்காய்ப் பொடியுடன் சம பங்கில் சேர்த்து, அதில் சிறிதளவு தேன் விட்டு கலந்து தினமும் 1/2 டீஸ்பூன் அளவு காலை, மாலை என இருவேளை உண்டு வந்தால் உடலில் ஏற்படும் இளைப்பு நோய்நீங்கும்.
திப்பிலிப் பொடியை பசுவின் பாலோடு கலந்து நன்றாக காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, மூர்ச்சை, என முப்பிணியும் நீங்கும். மேலும் ஆண்மை பெருகும்.
திப்பிலியை நன்றாக வறுத்துப் பொடியாக்கி, அதில் அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
மேலும் இரைப்பை, மற்றும் ஈரல் வலுப்பெறும். திரிகடுகத்தை (திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு) சம அளவில் எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் போன்றவை குணமாகும்.
திப்பிலியை நன்றாக இடித்துப் பொடியாக்கி 1 ஸ்பூன் அளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். மேலும் செரிமானம் அதிகரிக்கும்.
இவ்வுளவு மருத்துவகுணங்கள் இருப்பதால் தான் சங்க காலம் தொடங்கி இப்ப இருக்கும் கம்யூட்டர் காலம் வரைக்கும் திப்பிலி முக்கியமானதாக இருக்கு.