உள்ளூர் மட்டும் இல்லை - வெளியூர் பேருந்துகளும் ஜூன் 28 ஆம் தேதி முதல் இயக்கம்

Tn bus service Long distance buses
By Petchi Avudaiappan Jun 26, 2021 10:12 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி முதல் 27 மாவட்டங்களுக்கு இடையே தொலைதூரப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதையொட்டி பல்வேறு விதமான தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதில் ஏற்கனவே அறிவித்த நான்கு மாவட்டங்களை தவிர்த்து மேலும் 23 மாவட்டங்களுக்கும் பொதுக் போக்குவரத்திற்கு திங்கட்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில்  அதுதொடர்பான தகவலை போக்குவரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அரசு பேருந்துகள் 50% பயணிகளுடன் 28 ஆம் தேதி காலை 6 மணி முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.