ஓசூரில் இருந்து தொலைதூர அரசு பேருந்து சேவை தொடக்கம்... சொந்த ஊர் திரும்பும் பொதுமக்கள்...
ஓசூரில் இருந்து தொலைதூர ஊர் களுக்கான பேருந்துகளின் சேவை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரானா நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு 24-ஆம் தேதி முதல் ஒருவாரத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
இதன் காரணமாக வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக நேற்று மாலை முதல் இன்று நள்ளிரவு வரை அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்தது.
இதனையடுத்து தமிழக- கர்நாடக எல்லையான ஓசூரில் இருந்து வேலூர்,சென்னை, தருமபுரி, சேலம், திருச்சி , கோவை போன்ற ஊர்களுக்கு செல்வதற்காக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிந்தவாறு சமூக இடைவெளியுடன் குறைந்த எண்ணிக்கையில் பயணம் செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக பேருந்துகளிலும் அனைவரும் கட்டாயம் முகம் கவசம் அணிய வேண்டும் என வாசகங்கள் அச்சிடப்பட்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.