ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு : லண்டன் சென்றடைந்தார் குடியரசுத் தலைவர்
ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றடைந்தார்.
ராணி எலிசபெத் மரணம்
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு வர உள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

லண்டன் சென்ற குடியரசுத் தலைவர்
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, நாளை ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றடைந்தார்.
அங்கு நாளை ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கிலும் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.