காலை இழந்த லொள்ளுசபா நடிகர் சிரிக்கோ உதயா - அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் சிரிக்கோ உதயாவின் இடது கால் முட்டிக்கு கீழே உள்ள பகுதி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது.
சிரிக்கோ உதயா
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளுசபா தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் சிரிக்கோ உதயா. இவர் நடிகர் சந்தானத்தின் பல காமெடி காட்சிகளுக்கு வசனம் எழுதி உள்ளார்.
நடிப்பதோடு மட்டுமல்லாமல் 35 வருடங்களாக இசை துறையில் வயலின் வாசித்திருக்கிறார் சிரிக்கோ உதயா.
இடது கால் நீக்கம்
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வந்த இவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைந்ததோடு, காலில் இரத்த ஓட்டமும் சரியில்லாமல் இருந்துள்ளது.
இதனையடுத்து நேற்று(15.02.2025) ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் இடது கால் முட்டிக்கு கீழே உள்ள பகுதியை நீக்கியுள்ளனர். இது குறித்து பேசிய அவரது மகள், அப்பா தற்போது நலமுடன் உள்ளார். விரைவில் வீட்டிற்கு திரும்புவோம் என தெரிவித்தார்.
நடிகர்கள் முத்துக்களை, கிங்காங் உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்து தேவையான உதவிகள் செய்துள்ளனர். சிரிக்க வைத்த நடிகருக்கு இப்படி ஒரு நிலையா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.