"வடிவேலு போன்ற சீனியர் நடிகர்கள் யாரையும் வளர விட மாட்டாங்க...” - லொள்ளு சபா சுவாமிநாதன் பரபரப்பு பேட்டி
பல வருடங்களாக சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நடித்து வருபவர்தான் நடிகர் சுவாமிநாதன்.
இவர் லொள்ளு சபாவில் வெளிச்சம் பட்டு காமெடி உலகிற்குள் வந்தார். அதன் பிறகு அவரும் சந்தானமும் இணைந்து செய்த காமெடிகள் நாம் வயிறு குலுங்க குலுங்க ரசித்தவைகளாகும்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் நடிகர் வடிவேலு குறித்து பேசியுள்ளார். தற்போது அந்த பேட்டி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் பேசியதாவது -
"ராஜ்கிரண் சார் ஆபீஸ்ல ஆபீஸ் பாயா இருந்தவர்தான் நடிகர் வடிவேலு. அப்போ 'தலைவா ஏதாவது சான்ஸ் இருந்தா சொல்லுங்க தலைவா'ன்னு கேட்டுக் கொண்டிருப்பார். அப்புறம் அவர் ‘சிங்காரவேலன்’ படித்தில் நடித்தார்.
அப்படத்தில் நான் ஒரு போலீஸ் கேரக்டர் பண்ணிந்தேன். அப்போலாம் கார்ல போகும்போது, நீ பின்னாடி ஜம்முன்னு உக்காரு தலைவா, நான் ட்ரைவரோட ஒண்டி உக்காந்துக்குறேன்னு சொல்லுவாரு. அதன் பிறகு, நான் ‘ஆறு’ படத்துலதான் பார்த்தேன்.
அதுல எனக்கு ஒரு சின்ன ரோல்தான். நடிக்கும்போது நிறுத்தி நிறுத்தி 'சரியா வர்லயே, திரும்ப பண்றீங்களா…' என்று திரும்ப திரும்ப நிறுத்தி நிறுத்தி கேட்டுகிட்டே இருந்தார்.
நான் சொன்னேன், 'சார் உங்களோட நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களை நான் ரொம்ப மதிக்குறேன். ஏதாவது இப்படி பண்ணலாம் அப்படி பண்ணலாம்ன்னா சொல்லுங்க மாத்திக்கலாம்.
அதுக்காக சும்மா சரியா வரல, சரியா வரலன்னு சொல்லிகிட்டே இருக்காதீங்க.' ன்னு சொன்னதும். 'அப்படிலாம் அவர்கிட்ட பேச கூடாது' ன்னு எல்லாரும் மெதுவா சொன்னாங்க. டைரக்டர் அங்கிருந்து கண்ண காமிச்சார், 'அவர் சொல்றத கேட்டுக்க, நான் சொன்னத பண்ணிடு'ன்னார்.
நானும் பண்ணேன் ஷாட் ஓகே ஆயிடுச்சு. வடிவேலு வந்து 'என்ன ஓகே, சரியா வர்லயே'ன்னார். டைரக்டர் சார் 'இல்ல சார் உங்களுக்குதான் க்ளோஸ், அவருக்கு சின்ன ஷாட்தான் ஓகே தான் வாங்க'ன்னு சொன்னதும் 'அப்படியா சரி சரி'ன்னு வந்துட்டார். இது போல், எல்லா சீனியர் நடிகர்களுமே யாரையும் வளர விட மாட்டார்கள்.
கவுண்டமணி இருக்கும்போது நிறைய பேர் கஷ்டப்பட்டுள்ளனர். நாகேஷ் சார், கவுண்டமணின்னு அவங்க அவங்க காலத்துல சீனியரா இருக்கும்போது ஜுனியர்கள வளரவிட மாட்டாங்க. ஆனால் செந்தில் சார் அப்படி கிடையாது. விவேக், சூரி, அந்த மாதிரி பண்ணமாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.